கன்னியாகுமரியில்  வாலிபர் வெட்டி கொலை

கன்னியாகுமரியில்  வாலிபர் வெட்டி கொலை
X
பெண்ணிடம் விசாரணை
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுத கருங்குளத்தான் விளையை சேர்ந்தவர்  பரமேஷ் (37). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக பரமேசுக்கும் பெண்ணின் கணவருக்கும் இடையே  முன் விரோதம் இருந்து வந்துள்ளது.        இந்த நிலையில் நேற்று இரவு பரமேசுக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் பரமேஷ் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து  தகவல் அறிந்து தென் தாமரை குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.       குமரி மாவட்ட  எஸ்பி ஸ்டாலின் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட பரமேஷ் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக பரமேசுடன் தகராறு செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கணவரையும் பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Next Story