விலை சரிவு

விலை சரிவு
X
வரத்து அதிகரிப்பு எதிரொலியாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிந்தது
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700 - க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், திருப்பூர், உடுமலைப்பேட்டை, கேரளா, பெங்களூர், மைசூர் போன்ற பகுதியிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் வ உ சி காய்கறி மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. காய்கறிகள் வரத்து அதிகரிப்பு எதிரொலியாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று வ உ சி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:- கத்திரிக்காய் - 30, வெண்டைக்காய் - 45, பீர்க்கீங்காய் - 40, புடலங்காய் - 25, பச்சை மிளகாய் - 30, முருங்கைக்காய் - 100, முள்ளங்கி - 25, பட்டா வரை - 30, கருப்பு அவரை - 45 , சவ்சவ் - 20, முட்டைகோஸ் - 20, கோவக்காய் - 30, பீட்ரூட் - 30, கேரட் - 70, உருளைக்கிழங்கு - 30, பாவக்காய் - 40, இஞ்சி - 50, சுரக்காய் - 10, காலிப்ளவர் - 25, சக்கரவள்ளி கிழங்கு - 35, கருணைக்கிழங்கு - 70, பட்டாணி - 40, சின்ன வெங்காயம் - 40, பெரிய வெங்காயம் - 50, பீன்ஸ் - 60, தக்காளி - 15 - 20. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது காய்கள் விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் பல்வேறு இடங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகள் வரத் தாகியுள்ளது. இதன் எதிரொலியாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகள் விலை சாய்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி பீன்ஸ் பட்டா வரை, கருப்பு அவரை விலை வெகுவாக சரிந்துள்ளது. தற்போது கோவில் திருவிழா, தொடர் முகூர்த்தம் வருவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை சரிந்துள்ளது என்றனர்.
Next Story