வெளிநாட்டில் வேலை என மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

X
குமரி மாவட்ட எஸ் பி அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களை நம்ப வைத்து போலி ஏஜென்ட்கள் பலர் பண மோசடியில் ஈடுபடுவ தாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவ தாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது, விசிட்டிங் விசாவில் அழைத்து சென்று வேலை வாங்கி தராமல் தராமல் ஏமாற்றுவது, குறிப்பிட்ட வேலை என அழைத்து சென்று ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலை தராமல் சைபர் அடிமைகள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுத்தப்படும் செயல் நடைபெற்று வருகிறது. இது போன்ற மோசடிக ளில் சிக்கி ஏமாறாமல் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கன்னி யாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள வேலையின் உண்மை தன்மை மற்றும் ஏஜென்ட்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கன்னியா குமரி மாவட்ட காவல் துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொண்டால் கன்னியா குமரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடியாகவோ புகார் தெரிவிக்கலாம். வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபு வர்கள் மீது கடுமையான நடவடிக்கை. எடுக்கப்படும் தொடர்ச்சியாக இச்செ யல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Next Story

