காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கடல்மங்கலம், மருதம், மல்லியங்கரணை ஆகிய பகுதிகளில், உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடல்மங்கலம் காப்பு காட்டில் வாலிபர்கள் இருவர் சந்தகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். இருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், 2 கிலோ கஞ்சா விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பிடிப்பட்டவர்கள் வாடாதவூர் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், 27 ; மற்றும் சிறுமையிலூர் ராஜதுரை, 23 ; என்பது தெரியவந்தது.
Next Story

