தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் தடுப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு பேரணி:*

X
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டாரத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த இறுதியாண்டு தோட்டக்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் கிராமப்புற தோட்டக்கலை அனுபவத்திட்டத்திற்காக வசித்து வருகின்றனர். கல்லூரி முதல்வர் டாக்டர் G.உமாபதி அவர்கள், கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவத்திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி S. சௌந்தர்யா அவர்கள் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.திருமால் முருகன் அவர்கள் மேற்பார்வையில் இந்த திட்டம் மாணவர்களால் செயல்படுத்தப்படுகிறது. அதற்கிணங்க இன்று செய்யார் வட்டாரம் புளியரம்பாக்கம் கிராமத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தினேஷ்,இளவரசன், கோவர்த்தன்,குணால்,ஹரிஹரன்.K,ஹரிஹரன்.P ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் புளியரம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. போதை பொருள் தடுப்பு மற்றும் பாலியல் வன்கொடுடைமை எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தினர். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாலியல் வன்கொடுமையால் நிகழும் பேராபத்துகள் ஆகியவற்றை அவர்கள் ஊரக பேரணி மூலம் பொது மக்களுக்கு தெரிவித்தனர். இப்பேரணி பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் தெரிவித்தனர்.
Next Story

