தி மு க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

தி மு க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X
தி மு க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கழக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கடும் வெயிலில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் தாகத்தை தீர்க்கும் வகையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மற்றும் திருச்செங்கோடு நகரக் கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி,நீர்மோர் உள்ளிட்டவற்றை திமுக நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.நடேசன், நகர கழக செயலாளர் தா.கார்த்திகேயன், வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, டி.ஆர்.தாண்டவன் மற்றும் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story