தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு
X
அந்தியூர் அருகே மாயமான தொழிலாளியின் உடல் கிணற்றில் மீட்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளி திருப்பூர் அருகே உள்ள குரும்ப பாளையம் காலனியை சேர்ந்தவர் தனபால் (27). கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தனபால் திடீரென மாயமானார். இது சம்பந்தமாக அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்து வந்த நிலையில் நேற்று குருப்ப பாளையம் காலனி பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு ஆணின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் இறந்த கிடந்தது அவர்களது மகன் தனபால் என தெரிய வந்துஇது தொடர்பாக வெள்ளி திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் மூலம் தனபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை செல்வன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story