சங்கரன்கோவிலில் வழக்கறிஞரை தாக்கிய பெண்: போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் வழக்கறிஞரை தாக்கிய பெண்: போலீசார் விசாரணை
X
வழக்கறிஞரை தாக்கிய பெண்: போலீசார் விசாரணை
.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பன்னீருத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைமால் இவரது மனைவி புவனேஸ்வரி இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக விவகாரத்து சம்பந்தமாக சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஜீவனாம்சம் சம்பந்தமாக விசாரணை நடைபெற்றது. அப்போது உமா மகேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்றும் விசாரணை நடைபெற்ற நிலையில் தனக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் திருமலைச்சாமி நீதிமன்றம் அருகே கடையில் அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருந்த போது புவனேஸ்வரி அங்கு சென்று வழக்கறிஞர் திருமலை சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகில் இருந்த வாளியால் கடுமையாக தாக்கியுள்ளார் இதில் வழக்கறிஞர் திருமலைச்சாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தொடர்ந்து வழக்கறிஞர் திருமலைச்சாமி சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இச்ச சம்பவத்தால் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் ஒரு பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது மேலும் வழக்கறிஞர் தாக்கிய புவனேஸ்வரியை சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story