முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி இலவச மருத்துவ முகாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி இலவச மருத்துவ முகாம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை ஒட்டி நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு சார்பில் இலவச மருத்துவ முகாம் தேவனாங்குறிச்சி ரோடு விசாகன் மருத்துவமனையில் நடைபெற்றது.முகாமை முன்னாள் தமிழக அமைச்சர் அதிமுக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் தங்கமணி தொடங்கி வைத்தார்.நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் பரணிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர்,மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் தனசேகரன் இணைச்செயலாளர்கள் ஜனார்த்தனன் சித்தேஸ்வரன் கவிதா ஒன்றிய செயலாளர்கள் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் எம் டி சந்திரசேகர் தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன்,திருச்செங்கோடு நகர அதிமுக அவை தலைவர் பொன்னுசாமி, நகர அதிமுக செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் அங்கமுத்து,நகர அம்மா பேரவை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நகர்மன்ற உறுப்பினர் மல்லிகா, முன்னாள் தொகுதி கழக இணை செயலாளர் முரளிதரன்,ஆகியோர் உள்ளிட்ட மகளிர் அணி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் வார்டு கழகச் செயலாளர்கள்என பலரும் கலந்து கொண்டனர்.முகாமில் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம்ஆகியவை நடைபெற்றது.
Next Story