ரயில் என்ஜின் உதவி லோகோ பைலட் மாரடைப்பால் மரணம்

ரயில் என்ஜின் உதவி லோகோ பைலட் மாரடைப்பால் மரணம்
X
கன்னியாகுமரி
நாகர்கோவில் வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் உதவி லோகோ பைலட் மாரடைப்பால்  மரணம் அடைந்தார்.         அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து கன்னியாகுமரிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் ரயில்  நிலையம்  வந்தடைந்தது. பின்னர் கன்னியாகுமரிக்கு 12. 15 மணிக்கு சென்று விட்டு, 12. 45 மணிக்கு காலி பெட்டிகளுடன் சுத்தம் செய்யும் பணிக்காக விளக்குகளை அணைத்துவிட்டு மீண்டும் கன்னியாகுமரியில் இருந்து  நாகர்கோவில் சந்திப்பு நிலையம் திரும்பியது.        ரயிலில் லோகோ பைலட் மோகன் என்பவருடன், பிரதீப் உதவி லோகோ  பைலட்டாக பணியில் இருந்தார். ரயில் நாகர்கோவில் நிலையத்திற்கு அதிகாலை 1 .10 மணிக்கு வந்தது. அப்போது மோகன் கீழே இறங்கிய நிலையில், பிரதிப் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரயில் எஞ்சின் அறையில் மயங்கி சரிந்தார். இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு மோகன் தகவல் தெரிவித்தார்.        உடனே ரயில்வே மருத்துவர் வந்து பார்த்துவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவிட்டனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இறந்து போன பிரதிப் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story