திண்டிவனம் அருகே இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

திண்டிவனம் அருகே இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை
X
குடும்பத் தகராறு தற்கொலை
திண்டிவனம் வட்டம், வைரபுரம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் துரைமுருகன், தொழிலாளி. இவரது மனைவி கௌரி. இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகும் நிலையில், 6 வயதில் மகன் உள்ளாா்.தம்பதியிடையே கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி குடும்பப் பிரச்னையால் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த கௌரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌரி, அங்கு உயிரிழந்தாா். இது குறித்து திண்டிவனம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story