குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் அடைப்பு

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் அடைப்பு
X
விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
சென்னை பெரும்பாக்கம், கலைஞா் நகரைச் சோ்ந்த சிவானந்தம் மகன் சிவக்குமாா் (21). விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சகாதேவன் மகன் சந்தோஷ் (24). இவா்கள் மீது திண்டிவனம் போலீஸாா் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரைப்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சிவக்குமாா், சந்தோஷ் ஆகியோரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.அதன்படி, திண்டிவனம் போலீஸாா் இருவரையும் தடுப்புக்காவலில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
Next Story