பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்த ஆலோசனை

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்த ஆலோசனை
X
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் இன்று (06.03.2025) துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர்  தெரிவிக்கையில்-      குமரியில் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் சுற்றுலாப்பயணிகளின்  வசதிக்காக பூம்புகார் கப்பல் 3 பயணிகள் படகுகள் வாங்கப்படவுள்ளது. தற்போது உள்ள பயணிகளின் படகுகளின் தன்மைகள் குறித்தும்,  உறுதித்தன்மை குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் மூலமாக நுழைவுச்சீட்டு வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக புதுப்பிக்கப்பட்ட புதிய இணையத்தளம் விரைவில் துவக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கூறினார்.         கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் சத்தியமூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
Next Story