திருட்டை புகாரளித்ததால் வீடு சூறை 

திருட்டை புகாரளித்ததால் வீடு சூறை 
X
மார்தாண்டம்
குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (54). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அதே பகுதியில் டேவிட் மகன் லிபின் லால் என்பவர் வீடு உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு களியக்காவிளை, மருதன்கோடு பகுதியை சேர்ந்த கார் வியாபாரி ஸ்டாலின், புதுக்கடை பகுதி சேர்ந்த ராஜன் ஆகியோர் இந்த பகுதி ஆடுகளை திருடி சென்றதாக  கூறப்படுகிறது.        இதைக் கண்ட லிபின் லால் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால்  ஸ்டாலின், ராஜன் ஆகிய இருவரும் லிபின்லால் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். தற்போது லிவின்லால் தனது வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் தங்கி உள்ளார்.        இந்த நிலையில் சம்பவத்தினம்  அதிகாலையில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற  நபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து உள்ளனர். மேலும் அங்கிருந்த ஹோம் தியேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றுள்ளனர்.      இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்டாலின், ராஜன் ஆகியோர் என கூறி மார்த்தாண்டம்  போலீஸ் நிலையத்தில் டேவிட் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஸ்டாலின், ராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story