ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்ற தீர்த்த குட ஊர்வலம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 28ம்ஆம் தேதி பூச்சாட்டுத ளுடன் துவங்கியது. 15 நாட்கள் திருவிழாவை ஒட்டி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி குண்டம் இறங்க உள்ளனர். அவ்வாறு குண்டம் இறங்க உள்ள பக்தர்கள் ஆயிரக் கணக்கானவர்கள் திருச்செங்கோடு மலை அடி குட்டையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் அழைத்தல், சக்தி கரகம் எடுத்தல், என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை குத்து விளக்கு பூஜை, அக்னி கரகம், அலகு குத்துதல் நடைபெற்று நான்கு ரத வீதி வழியாக உலா வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை நடக்க உள்ளது. வரும் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக் கிழமை 108 சங்கா பிஷேகம், 11ஆம் தேதி செவ்வாய்க் கிழமை மகா குண்டம் பெருவிழா நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாலையில் பொங்கல் விழா நடக்க உள்ளது. 15ஆம் தேதி சனிக்கிழமை அம்பாள் திருவீதி உலாவும்,தயிர் சாதம் வழங்கி மஞ்சள் நீராட்டு நடத்தி விழா நிறைவடைய உள்ளது.
Next Story





