தொகுதி வளர்ச்சிக்காக முதலமைச்சரை சந்தித்த எம் எல் ஏ

X
சென்னை தலைமை செயலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் திரு ஈ.ஆர் ஈஸ்வரன் MLA அவர்கள் வருகின்ற நிதிநிலை அறிக்கையில் கொங்கு மண்டல பகுதி வளர்ச்சிக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்குவது சம்பந்தமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். சேலம் நாமக்கல் மாவட்டங்கள் பயன் பெறுகின்ற திருமணிமுத்தாறு திட்டம், கொங்கு மண்டலம் முழுவதுமே பயன் பெறுகின்ற பாண்டியாறு - பொன்னம்புழா திட்டம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் என்று நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். கோவையை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு காலிங்கராயன் பெயரையும் சேர்த்து "காலிங்கராயன் அத்திக்கடவு திட்டம்" என்று பெயர் வைக்க வேண்டும். அதுதான் காரணப்பெயராக இருக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளார். திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு மாற்று பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையில் ஒரு தீயணைப்பு நிலையம் தேவை என்கின்ற கோரிக்கையை வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் காவல் நிலைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இப்படி பல்வேறு விஷயங்கள் கொங்கு மண்டலத்தினுடைய வளர்ச்சிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்திலே கோரிக்கையாக வைத்து அதை வருகின்ற நிதிநிலை அறிக்கையிலே நிறைவேற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
Next Story

