வேளாங்கண்ணிக்கு சென்றவர் மாயம் - புகார்

X
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (63). கூலி தொழிலாளி. இவர் கடந்த 28ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த 7 பேருடன் வேன் ஒன்றில் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது ஜான்சன் எங்கோ வழி தவறி சென்றுள்ளார். இவரை பல இடங்களில் தேடியும் காணாததால் மற்றவர்கள் சொந்த ஊர் வந்தனர். ஜான்சனின் வீட்டில் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இது குறித்து அவர் உறவினர்கள் திருவட்டார், குலசேகரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு, வேளாங்கண்ணி போலீசிலும் புகார் செய்தனர். அவரிடம் செல்போன் இல்லாததால் அவர் எங்கு இருக்கிறார் என்பது கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் தேடுதலை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
Next Story

