மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மஞ்சங்கரணை பகுதியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மும் மொழி கொள்கைக்கு ஆதரவு வேண்டி வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் எஸ்.சுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் அழிஞ்சி வாக்கம் பாஸ்கர் ஆகியோர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு கோரி கையெழுத்தை பெற்றனர். அப்பகுதியில் வசிக்கும் முன்னாள் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் அவ்வழியாக செல்லும் போது அவரிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். பின்னர் ஆதரவளிக்கும் வகையில் கையெழுத்தையும் பெற்றனர் பின்னர் செய்தியாளர்களிடம் அனந்தபிரியா பேசுகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் அவர்கள் இதில் கையெழுத்திட்டது அரசியல்வாதியாக அல்ல ஒரு தந்தையாக என்று பதில் அளித்தார். மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு முழுமையாக பாதுகாப்பு இல்லை எனவும் வேலியே பயிரை மேய்வது போல் காவல்துறையினரே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
Next Story





