தொகுப்பூதிய அடிப்படையில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ் குழந்தைகள் இல்லங்களில், மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சிவகங்கை மாவட்டம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஓ.சிறுவயலில் இயங்கும் அரசினர் (ஆண்) குழந்தைகள் இல்லங்களில், மதிப்பூதியத்தின் அடிப்படையில், ஆற்றுப்படுத்துநர்கள் நியமனம் செய்ய உள்ளதால், தகுதியான நபர்கள், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ்செயல்பட்டு அரசு பெண் குழந்தைகள் இல்லம் (அன்னை சத்தியம்மையார் குழந்தைகள் இல்லம்) சிவகங்கை மற்றும் காரைக்குடி ஓ.சிறுவயலில் இயங்கும் அரசினர் ஆண்குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு மதிப்பூதியத்தின் அடிப்படையில் (ஒரு மாதத்திற்கு 9 நாட்களுக்குமிகாமல்) ஒவ்வொரு அமர்விற்கும் போக்குவரத்து செலவினம் உட்பட ரூ.1,000/-(ரூபாய்ஆயிரம்மட்டும்) வழங்கிடும் வகையில் 4 ஆற்றுப்படுத்துநர்கள் நியமனம் செய்திட இருப்பதால், இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைபட்டம் பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரியகல்வி சான்றுகளின் ஒளிநகலுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.131, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை – 630562 என்ற முகவரிக்கு, வருகின்ற 18.03.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைத்திடல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.sivagangai.nic.inஎன்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம், மேலும், விபரங்களுக்கு 04575 240166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story