மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல ஏக்கர் மூலிகை செடிகள், அரிய வகை மரங்கள் தீயில் கருகி சேதம்

காட்டு தீ
தேனி அல்லிநகரம் அருகே வீரப்ப அய்யனார் கோயிலின் மேல் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் இன்று மாலையில் இருந்து தொடர் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு தீ அவ்வப்போது பற்றி எரிந்து வருகிறது இந்நிலையில் இன்று மாலையில் இருந்து சிறிய அளவில் பற்றி எரிந்த தீயானது ஒவ்வொரு பகுதிக்கும் பரவி இரவு நேரத்தில் தொடர் காட்டுத்தியாக மாறி எரிந்து வருகிறது பல்வேறு மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள் உள்ளிட்ட ஏக்கர் கணக்கில் மரம் செடிகள் காட்டுத் தீயில் எரிந்து சேதம் ஆகி வருகிறது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயானது தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் காண முடிவதால் வன ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர் மேலும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக தீப்பற்றி எறிந்ததா? அல்லது சமூக விரோதிகள் செய்த செயலா? என்பது குறித்து வனத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
Next Story