கராத்தே போட்டி ஆர்.என் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கராத்தே போட்டி ஆர்.என் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
X
கராத்தே போட்டி ஆர்.என் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
பரமத்தி வேலூர், மார்ச்.6: பரமத்தி வேலூர், சக்ரா நகரில் உள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளி மாணவ, மாணவி யர் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனர். எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமி சார்பில் நடைபெற்ற இரண்டாவது மாநில அளவிலான கராத்தே போட்டி, கரூரில் உள்ள ஒரு தனியார் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந் துகொண்டனர். இப்போட்டியில் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளி மாணவ, மாணவியர் 35 பேர் கலந்துகொண்டு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும், ஒட்டுமொத்த கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) எம்.ஜோதி கோப்பைகள் மற் றும் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கி பராட்டினார். பள்ளியின் தலைவர் ஆர்.சண்முகம், தாளாளர் என்.சக்தி வேல், செயலாளர் எஸ்.ராஜா, இயக்குநர்கள் மருத்துவர் ஆர். என்.அருள், பொறியாளர் எஸ்.சேகர், என்.சம்பூர்ணம், பள் ளியின் முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story