காங்கேயத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஏபி முருகானந்தம் தொடங்கி வைத்தார்

காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை காங்கேயம் நகர பாஜக சார்பில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக "சம கல்வி எங்கள் உரிமை" எனும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கப்பட்டது. மும்மொழி கல்விக்கு ஆதரவாக பாஜக தொண்டர்கள் தலைநகர் முதல் கிராமங்கள் வரை ஒவ்வொரு பூத் வரை சென்று கையெழுத்து பெறுவார்கள். மே மாதத்திற்குள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று காங்கேயம் நகர பாஜக சார்பில் நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா முன்னிலையில் காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் காங்கேயம் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தெற்கு ஒன்றிய தலைவர் குரு தேவராஜ், மாவட்டதுணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 200க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது: அப்போது பேசிய அவர் தமிழக மக்களிடையே நேரடியாக சென்று ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு மாணவர்களுக்கு இளைக்கக்கூடிய கொடுமைகளை அவர்களுக்கு வந்து சேர வேண்டிய நியாயமான சலுகைகளையும், உரிமைகளை, தடுத்துக் கொண்டுள்ளனர். என்பதை மக்களிடையே தெரிவிக்கவே இந்த கையெழுத்து இயக்கம் எனவும் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒரு கோடி கையெழுத்து பெற்றுத் தர வேண்டும் என எங்கள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இந்த கையெழுத்து இயக்கத்தை செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். நமது பாரத பிரதமர் மாணவர்களிடையே மூன்று மொழி கொள்கைகளை அரசு பள்ளி மாணவர்கள் இடையேயும் இலவசமாக கொண்டு சேர்க்க வேண்டும், திறன் மேம்பட்டு அவர்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் செயல்பட்டு கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார். மதுக்கடைகளை குறைப்பதாக கூறிய திமுக தற்போது எஃப் எல் 2, எஃப் எல் 3 என்ற பார் வகைகளை தனியாருக்கு சொந்தமாக அதிகபடியாக வழங்கிவருகின்றது என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முருகானந்தம் : அம்மையார் கனிமொழி அவர்கள் பதாகைகள் ஏந்தி தமிழகத்தில் தான் அதிக விதவைகள் உள்ளதாகவும் ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக குறைப்போம் என்று தெரிவித்தார் ஆனால் தற்போது 19 வயது இளம் மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து உயிரிழந்துள்ளார் இதுபோல் செய்திகளை நாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்றார். எங்க படிப்படியாக குறைத்துள்ளார்கள் அதற்கு பதிலாக குவாட்டருக்கு பதிலாக 90 எம்எல் எப்படி வழங்கலாம், அவைகளை அமைச்சர் முத்துசாமி எப்படி கொண்டு போய் பொதுமக்களிடம் சேர்க்கலாம் என்பதைத்தான் அவர்கள் தற்போது யோசனை செய்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
Next Story