வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு : திருடனை பிடித்து பைக்கை மீட்ட போலீசார்
வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு : திருடனை பிடித்து பைக்கை மீட்ட போலீசார் வீடுகளின் வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருட்டு : நீண்ட நாள் திருடனை பிடித்த போலீஸ் மதுரவாயில் அருகே வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வானகரத்தில் உள்ள சமயபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் சரத்குமார் (31). கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மாலை வீட்டின் வெளியே இவர் நிறுத்திய ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்குமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த மதுரவாயல் போலீசார், பைக் திருட்டில் ஈடுபட்ட ஜேம்ஸ் (23) என்ற இளைஞரை கைது செய்தனர். சென்னையை அடுத்த பரணிபுத்தரை சேர்ந்த ஜேம்ஸ் மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி சமீப காலமாக வீடுகளின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து திருடு போன இருசக்கர வாகனத்தை மீட்ட போலீசார், பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story



