கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து அனுமதி பெற்று தர லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அலுவலக செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்

3000 லஞ்சம் பெற்ற அறநிலைத்துறை அலுவலக செயல் அலுவலர் கைது
பெரம்பலூரில் கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து அனுமதி பெற்று தர லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அலுவலக செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்* பெரம்பலூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பரமேஸ்வரர் ஆலய திருக்கோவில் அமைந்துள்ளது.பழமை வாய்ந்த கோவில் என்பதால் சீரமைக்க பொதுமக்கள் முடிவெடுத்து பெரம்பலூர் அருள்மிகு ஶ்ரீ மதனகோபாலசுவாமி திருக்கோவிலின் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தின் செயல் அலுவலரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(59) என்பவரை சந்தித்து இது தொடர்பாக தொடர்ந்து கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் இருந்து ஒப்புதல் பெற்று அனுமதி ஆணை பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட அறநிலையத்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள செயல் அலுவலர் கோவிந்தராஜ் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் கோவிலை சீரமைக்க செயல் அலுவலர் லஞ்சம் கேட்பதாக செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சிவாவிடம் இரசாயனம் தடவிய ரூ.3000 பணத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர் இந்நிலையில் பெரம்பலூர் அருள்மிகு ஶ்ரீ மதனகோபாலசுவாமி ஆலய அறநிலையத் துறை அலுவலகத்திற்கு சென்ற சிவா செயல் அலுவலர் கோவிந்தராஜை சந்தித்து பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த டிஎஸ்பி ஹேமசித்ரா ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஏற்கனவே கோவிந்தராஜ் இது போன்று வேறொரு மாவட்டத்தில் பணியாற்றிய போது இதேபோன்று வேறொரு லஞ்ச வழக்கில் கைதாகி பணிமாற்ற பேரில் பெரம்பலூருக்கு வந்தது குறிப்பிடதக்கதாகும் கோவிலை சீரமைக்க அனுமதி ஆணை பெற்று தர அறநிலையத் துறை அலுவலக செயல் அலுவலர் லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story