தென்காசியில் சாரண சாரணியர் இயக்கம் சார்பாக பேரணி நடைபெற்றது

X
தென்காசி மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்று மீண்டும் பள்ளிக்கு சென்று அடைந்தனர். இந்த பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story

