ராமநாதபுரம் குருபூஜை விழா நடைபெற்றது
ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் ஸ்ரீ செல்லம் சுவாமிகளின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா ஏராளமான ஆன்மீக பக்தர்கள் பங்கேற்பு ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் சிவஸ்ரீ செல்லம் சுவாமிகளின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் செல்லம் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீக பணி ஆகியவைகள் பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர்கள் சிறப்புரையாற்றினர், பல்வேறு அடிகளாரிடம் ஆசி பெற்றவர் கும்பமேளா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அருளாசி வழங்கியவர் நேற்று காலை அண்ணா நகர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் கணபதி ஓமத்துடன் ஆன்மீக விழா துவங்கியது செல்லம் சுவாமிகளின் குடும்பத்தினர் புனித நீர் எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு ஊற்றும் நிகழ்வும் மற்றும் செவத்தான் குடும்பத்தின் சார்பில் பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது அதன் பின்பு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் வாலாந்தரவை அண்ணா நகர் வழுதூர் உடைச்சியார் வலசை தெற்கு காட்டூர் தெற்கு குயவன்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாலாந்தரவை அண்ணாநகர் செவத்தான் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்
Next Story




