கந்திலி அருகே மின்கசிவு காரணமாக மூன்று வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்!தீயணைப்புத் துறையினர வர தாமதமானதால் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசம்*

கந்திலி அருகே மின்கசிவு காரணமாக மூன்று வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்!தீயணைப்புத் துறையினர வர தாமதமானதால் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசம்*
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மின்கசிவு காரணமாக மூன்று வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்!தீயணைப்புத் துறையினர வர தாமதமானதால் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசம்* திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான்,ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு என மூன்று வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வர காலதாமதம் வீட்டின் அருகே இருந்த பக்கெடில் தண்ணீர் பிடித்து பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது தண்ணீர் பீச்சு அடிக்க முயற்சி செய்தபோது மோட்டார் வேலை செய்யாததால் தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சு அடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். அதற்குள் தீ மளமளவென பரவி முழுவதுமாக வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் இருந்து இரண்டு காலி சிலிண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் மின் கசிவு காரணமாக மூன்று வீடுகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Next Story