சோளிங்கர் சந்தையில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்க கோரிக்கை

X
சோளிங்கர்-அரக்கோணம் பிரதான நெடுஞ்சாலையில் கூடலூர் பகுதியில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது.சாலையின் இருபுறமும் 500-க்கும் மேற்பட்ட காய்கறிகள்,மளிகை கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வாங்கி செல்கிறார். பொருட்கள் வாங்க வருபவர்கள் நெடுஞ்சாலையிலேயே வாக னங்களை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதால் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்படுகிறது.சில நேரங்களில் விபத்துகள் கூட ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஊராட்சிக்கு சொந்தமான பகுதியில் தனி இடம் ஒதுக்கி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

