பனப்பாக்கம் மீன் வலையில் பாம்பு சிக்கியதால் அதிர்ச்சி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள ஏரியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மீன் பிடிக்க வலை கட்டியிருந்தனர். அந்த வலையில் மீன்கள் சிக்கியுள்ளதா என்பதை அறிய இளைஞர்கள் அங்கு சென்று வலையை எடுக்க முயன்றனர்.அப்போது அதில் சுமார் 10 அடி நீள முள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு அச்சம் அடைந்தனர். மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு தப்பிக்க வழியின்றி இருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பாணாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாணாவரம் வனச் சரகத்தை சேர்ந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று வலையை அறுத்து, மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.இதையடுத்து மலைப்பாம்பை வனத்துறையினர் பாணாவரம் காப்புக்காட்டில் விட்டனர்.
Next Story

