கோவை: தரமற்ற மாத்திரை கொடுத்ததால் பரபரப்பு !

கோவை: தரமற்ற மாத்திரை கொடுத்ததால் பரபரப்பு !
X
ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதியவருக்கு தரமற்ற மாத்திரைகள் கொடுத்ததாக புகார்.
கோவை சின்னவேடம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 76 வயது முதியவர் ராஜன் என்பவர் கால் வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர் இல்லாததால், பணியில் இருந்த செவிலியர் மட்டுமே இருந்துள்ளார். அவர் ராஜனின் விவரங்களைப் பதிவேட்டில் குறித்துக்கொண்டு, அவருக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை ஒன்றை வழங்கியுள்ளார். ராஜன் அந்த மாத்திரையை உட்கொள்ளும் முன் கவனித்தபோது, அதில் கருப்பு நிற புள்ளிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டு செவிலியரிடம் சென்று முறையிட்டார். ஆனால், செவிலியர் அந்த மாத்திரை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பாஜகவினர் நேற்று அங்கு திரண்டு, சுகாதார ஆய்வாளர் மற்றும் வெள்ளக்கிணறு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தனர். மேலும், தரமற்ற மாத்திரைகளை வழங்கிய நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாததும், தரமற்ற மருந்துகள் வழங்கப்படுவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story