தேர் திருவிழா

தேர் திருவிழா
X
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 18-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மன் அழைத்தல், பொங்கல் வைத்தல் மற்றும் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடைபெற்றது.பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் தேரோட்டம் தொடங்கியது. பவானி சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக தேர்நிலையிலிருந்து தொடங்கிய தேரோட்டம் காவேரி வீதி, மேட்டூர் ரோடு, பூக்கடை வீதி, கிழக்குக் கண்ணார வீதி, தேர் வீதி, கீரைக்கார வீதி வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது. முன்னதாக, பவானி நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன், அதிமுக நகரச் செயலாளர் எம்.சீனிவாசன், காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனர். நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், கே.ஏ.சந்தோஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், திமுக இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் வாணி குமரன், நகர இளைஞரணி திமுக செயலாளர் இந்திரஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர் செல்லும் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து, மாலையில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் மாரியம்மன் கோயிலில் கம்பம் பிடுங்கப்பட்டு ஆற்றில் விடப்பட்டது.
Next Story