சாலை விபத்து

சாலை விபத்து
X
ஈரோடு அருகே கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில் 20 பேர் காயம்,ஒருவர் உயிரிழப்பு
கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்களம் டொல்கெட் அருகே உள்ள கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் சாலையை கடக்க முயற்சி செய்து பேருந்தின் குறுக்கே சென்றது. இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஆம்னி பேருந்தை சட்டென்று திருப்ப முயற்சி செய்த பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்த நிலையில் .இரு வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்தவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.விபத்து சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்...
Next Story