கையெழுத்து இயக்கம்

X
ஈரோடு மார்ச் 6 பாரதிய ஜனதா கட்சியின் சமகல்வி எங்கள் உரிமை என்ற மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை பாஜக மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இன்று துவக்கி வைத்தார். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் எஸ் எம் செந்தில் நிகழ்ச்சி க்கு தலைமை வகித்தார். பின்னர் எம் எல் ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையினால் பல்வேறு நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக தமிழ் ஆங்கிலத்தோடு ஒரு மொழியை மாணவர்கள் பயிலும் வாய்ப்பு ஏற்படும்.உலக தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை கிடைக்கும். பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்கும். வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கல்வி ஏழைகளின் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது .ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் சிலர் எதிர்க்கிறார்கள். ஹிந்தி படிக்க வேண்டும் என்று கூறப்படவே இல்லை. இந்தியை திணிக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகில் பல நாடுகளில் மாணவர்கள் பல்வேறு மொழிகளை பயின்றனர். அதிக மொழிகளை பயில்வது மாணவர்களின் அறிவுத்திறனை மேலும் மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல் தற்பொழுது தமிழகத்தில் தாய்மொழி கல்வி அல்லாமல் பிற மொழிகளில் பலர் கல்வி கற்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கை ஐந்தாவது வகுப்பு வரை தமிழ் மொழியிலேயே அல்லது தாய் மொழியிலேயே கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இக் கொள்கையை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. பொது மக்களிடமிருந்து பெறப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
Next Story

