கோவை: கொடநாடு வழக்கு - மேலாளர் நடராஜன் ஆஜர் !

X
நீலகிரி மாவட்டம்,கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் 2022-ம் ஆண்டு முதல் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் இதுவரை சுமார் 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு இதற்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டபோது ஆஜராகவில்லை ஆனால் இம்முறை அனுப்பப்பட்ட சம்மனுக்கு,நேற்று கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நடராஜன் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால், அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சர்ச்சைகள் மற்றும் இது போன்ற பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

