இறைவன் வேடங்களில் குழந்தைகள் வண்டி வேடிக்கை அசத்தல்
Komarapalayam King 24x7 |7 March 2025 11:50 AM ISTகுமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கை நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் நேற்றுமுன்தினம் மகா குண்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் குழந்தைகள் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், முப்பெரும் நாயகிகள், நவக்கிரக நாயகிகள், ராமர், சீதை, அனுமன், லட்சுமணன், நரசிம்ம அவதாரம், பிரகலாதன், விஸ்வாமித்திரர், பத்ரகாளியம்மன், மாரியம்மன், சக்தி, காஞ்சி காமாட்சி, சூரிய பகவான் வாகனத்தில் சங்கு சக்கரத்துடன் பெருமாள், காமெடி பாய்ஸ் உள்ளிட்ட வேடங்களில் வந்து, அசத்தினர். பவர் ஹவுஸ் முன்பிருந்து துவங்கிய வண்டி வேடிக்கை நிகழ்ச்சி, சேலம் சாலை, ராஜா வீதி வழியாக சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்து, காளியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. வழி நெடுக பொதுமக்கள் இரு புறமும் காத்திருத்து வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
Next Story







