அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

X
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது ஆகிய பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களான கழக அமைப்புச் செயலாளரும், பி.ஜி. ராஜேந்திரன் , அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர். வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான என். சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், இளம் பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா மாவட்ட அதிமுக தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் நிலா சந்திரன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சிக் கழக செயலாளர்கள் , நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

