கோவை: காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி !

கோவை: காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி !
X
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கார்ன் சஞ்சய் (27) என்பவர் மளுக்கப்பாறை எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற போது தேயிலை செடிகளுக்கு இடையில் நின்றிருந்த காட்டெருமை திடீரென தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சஞ்சய், அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மளுக்கப்பாறை எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.கோவையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கார்ன் சஞ்சய் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story