காவல் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ( மார்ச்.6)தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் இ.கா.ப., அவர்கள் தலைமையில், மதுரை மாநகர், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் அதிகாரிகளுடன், போக்சோ, பெண்கள் மீதான வன்கொடுமை, சைபர் கிரைம் குற்றங்கள், போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பது, பொதுமக்கள் - காவல்துறை நட்புறவு பேணுவது, காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது மற்றும் சட்டம்&ஒழுங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர், தென்மண்டல காவல் துறை தலைவர், மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story




