அதிமுக சார்பில் திமுக அரசின் அவலங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் வீடு வீடாக பிரச்சாரம்

அதிமுக சார்பில் திமுக அரசின் அவலங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் வீடு வீடாக பிரச்சாரம்
X
அதிமுக சார்பில் திமுக அரசின் அவலங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் வீடு வீடாக பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசின் அவலங்களையும் அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளையும்பொது மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக அமைப்பு செயலாளரும், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி பெரிய மணலி பகுதியில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டார். எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ராகா தமிழ்மணி, ஒன்றிய அவைத் தலைவர் ஜே.கே. பெரியசாமி, மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜவேல், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோபாலன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் மனோஜ், ஆகியோர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 3 1/2 ஆண்டு கால திமுக ஆட்சியில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, போதைப் பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு பெண்களுக்கான பாலியல் வன்முறை, ஆகிய அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறி முன்னாள் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Next Story