விவசாய சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 27வது மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 27 வது மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில் பல்வேறு கோரிக்கைகளை குறித்து தமிழ் நாடு வியாசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கைகள் ஒன்றிய அரசின் வேளாண் சந்தைப்படுத்தும் கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு வழங்க உள்ள அடையாள அட்டைக்கான பதிவு திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் நில பட்டாதாரர்களுக்கு மட்டுமே வருங்காலத்தில் மானியம், கடன், நிவாரணம், பயிர் காப்பீடு, திட்டங்கள் என்பதை கைவிட்டு விவசாயிகள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் ஆண்டுகளுக்கு 6 ஆராயிரம் என்பதை உயர்த்தி பன்னிரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தென் பெண்ணே பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தென்பெண்ணை ஆற்றிற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தீர்ப்பாயம் அமைத்திட வேண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை திருப்பத்தூரில் அமைத்திட வேண்டும் தனியார் குடிநீர் விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமிக்கண்ணு, நந்தி, பூபதி, முருகன், சிபிஐ மாவட்ட செயலாளர் சுந்தரேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்
Next Story



