திருப்பத்தூரில் குப்பை கிடங்கில் தீ! புகை மூட்டத்தாள் பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் குப்பை கிடங்கில் ,தீ, புகை மூட்டத்தால் குடியிருப்பு வாசிகள் அவதி! மெத்தன போக்காக செயல்பட்டு வரும் நகராட்சி நிருவாகம்! பொதுமக்கள் குற்றாசாட்டு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து தினம் தினம் டன் கணக்கில் குப்பை கழிவுகளை மலை போல் கொட்டி குவித்து வருகின்றனர் இந்த குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து கொட்டி வருகின்றனர் இந்த குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீவைத்து விடுகின்றனர் இந்நிலையில் குப்பை கழிவுகளுக்கு தீ வைத்து விட்டனர் இந்தக் குப்பை கழிவிலிருந்து வெளியேறும் புகை மூட்டம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்ற சாட்டு முன்வைக்கின்றனர் பொதுமக்கள் கூறுகையில் வெயில் காலங்களில் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது இதனால் குழந்தைகள் முதியவர்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர் சுமார் இரவு சுமார் 11 மணியிலிருந்து பகல் மூன்று மணி வரை குப்பைகள் எரிந்து வருகிறது இதை குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தொடர்பு கொண்டு கூறினாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்காக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் தீ காற்றின் வேகத்தால் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது நகராட்சி நிர்வாகம் லாரியின் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குடத்தின் மூலம் அனைத்து வருகின்றனர் ஆனால் தீ கட்டுக்ககுள் வராமல் பரவி வருகின்றது தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர் இதைக் குறித்து மாவட்ட நிருவாகம் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர் பேட்டி1) ராஜன் அப்பகுதி மக்கள் 2) பாஸ்கர் அப்பகுதி குடியிருப்பு வாசி
Next Story




