நாட்றம்பள்ளி அருகே வழி பாதையை அடைத்த நபரால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அரச மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை*
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வழி பாதையை அடைத்த நபரால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அரச மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வரதன் வட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியை சேர்ந்த சேகர் மற்றும் சாமன்னன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காலம் காலமாக பொது மக்கள் நடைபாதையை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த வழி பாதை தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அந்த வழி பாதியை இருவரும் அடைத்ததன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் சென்று வந்த மாணவ மாணவிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் அப்பகுதியில் உள்ள அரசு மரத்தின் கீழ் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வழி பாதையை அமைத்து தர வேண்டும் என பள்ளி மாணவிகள் கோரிக்கை வைத்தனர். எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி வழி பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story



