ராமநாதபுரம் கொலை வழக்கில் மூன்று இளைஞர்கள் கைது
ராமநாதபுரம் பரமக்குடியில் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த வழக்கில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் உத்திரகுமார், 35,. மார்ச் 5 ஆம் தேதி இரவு பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து சகோதரி ஜோதிமணி வீட்டிற்கு நடந்து சென்ற போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உத்தரகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உத்திரகுமார் உயிரிழந்தார். சென்னை வேளச்சேரியில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் முக்கிய குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் பழிக்கு பழியாக உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் பழனிச்சாமியின் மனைவி ராஜேஸ்வரி, மகள் லேகா ஸ்ரீ,, மகன் விஷ்ணு பிரதான் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் , பரமக்குடி தர்மராஜபுரத்தை சேர்ந்த தீனதயாளன்,23,. கிருஷ்ணா தியேட்டர் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம்,23,. வைகை நகரை சேர்ந்த கரன்,23,. ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கறிஞர் உத்திரகுமாரை எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் எதும் உள்ளதா? உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story




