மகளிர் தினத்தை முன்னிட்டு தூய்மை பெண் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
மார்ச் மாதம் 8ம் தேதி உலக மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சி சார்பில் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் மருத்துவர்கள் நகராட்சியுடன் இணைந்து நகராட்சியில் பணியாற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தினார்கள் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் அருள் தலைமை வகித்தார் நகர் நல அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.இந்திய மெடிக்கல் கவுன்சில்தலைவர் டாக்டர் சுகுணா செயலாளர் டாக்டர் சத்திய பானு மற்றும் டாக்டர் கோகுல் ஆகியோர் கலந்து கொண்டு பெண் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.துவக்க விழா நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜா, செல்விராஜவேல், புவனேஸ்வரிஉலகநாதன், முருகேசன், சுரேஷ்குமார், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முகாமில் 125 பெண் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
Next Story



