வேளாண்மை திட்டங்களில் பயன்பெற, விவசாயிகள் பெரும் பதிவேடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் : பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

வேளாண்மை திட்டங்களில் பயன்பெற, விவசாயிகள் பெரும் பதிவேடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் : பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
X
வேளாண்மை
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் அவர்களின் சுய விவரங்களை "விவசாயிகள் பெரும் பதிவேடு" (FARMERS REGISTRY) என்னும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் என பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சன்மதி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  "பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன அதில் நகர பஞ்சாயத்துகள் தவிர (பாப்பா வெளிபாளையக்கோட்டை, ரெங்கோஜிபாதோட்டம் கைலாசநாதபுரம், மகாராஜாசமுத்திரம், நாடியம்பாள்புரம்) மற்ற கிராமங்களில் 11,543 விவசாயிகள் பதிவு செய்யப்பட உள்ளனர்.  இந்த விவசாயிகள் பெரும் பதிவேடு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் கீழ் விவசாயிகள் பயன்பெற இயலும்.  இப்பெரும் பணியினை ஒருங்கிணைந்து செயல்படுத்திட மகளிர் திட்டம் சமுதாய வளப் பயிற்றுநர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் மூலம் கிராமங்கள் தோறும் விவசாயிகள் பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.  மேலும், விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய அருகில் உள்ள இ-சேவை மையத்தினை அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள அவர்களின் ஆதார் நகல், நிலப்பட்டா நகல், ஆதார் உடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் செல்ல வேண்டும். எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story