கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்

கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்
X
சிவகங்கை மாவட்டம், கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயன்பெறும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற 11.03.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இக்கல்வி கடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள் விண்ணப்ப நகல், மாணவ/ மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி Joint account பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story