எம்ஜிஆர் கலைக்கல்லூரியில் உலக மகளிர் தினவிழா.

X
ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி செயலாளர் ஏ.சி.இரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆரணி டிஎஸ்பி டாக்டர் டி.பாண்டீஸ்வரி கலந்து கொண்டு, எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும். குடும்பச் சூழல்களும், வறுமையும் சாதிப்பதற்கு தடைகள் அல்ல. படிக்கும்போதே பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து முயற்சிக்கும்போது நாம் அனைவரும் நம் வாழ்வில் உயரமுடியும். நல்ல பதவிகளை அடையலாம் என்றும், அதற்கு தன்னுடைய வாழ்வை எடுத்துக்காட்டாக முதல் முயற்சியிலேயே போட்டி தேர்வில் நான் சிறந்த முறையில் தேர்வு பெற்று இந்த பதவிக்கு தேர்வானேன் என்றும், மேலும் நம் சமூகத்திலும், பணியாற்றும் இடத்திலும் வன்கொடுமை சார்ந்த நடத்தைகள் தென்பட்டால் உடனடியாக தயக்கம் இன்றி காவல்துறைக்கு தகவல் அளித்தால் கட்டாயம் அதிலிருந்து தங்களை மீட்பதுடன் அதற்கு காரணமான நபருக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இதில் சிறப்பு அலுவலர்கள் பி.ஸ்டாலின், கார்த்திகேயன், இணைப்பதிவாளர் பெருவழிதி, பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, கலைக் கல்லூரி முதல்வர் கந்தசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரபு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இளங்கோ, மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜலட்சுமி, கண்ணம்மாள் பள்ளி முதல்வர் ரஞ்சனி ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். கண்ணம்மாள் பள்ளி ஆசிரியை நளினி நன்றி உரையாற்றினார்.
Next Story

