கம்மவான்பேட்டையில் இயற்கை சந்தை துவக்க விழா மகளிர் திட்ட இயக்குனர் பங்கேற்பு

ஆரணி அடுத்த கம்மவான்பேட்டை உழவர் இயற்கை சந்தை துவக்க விழா நடைபெற்றது.
ஆரணி அடுத்த கம்மவான்பேட்டை உழவர் இயற்கை சந்தை துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு, ஊராட்சி தலைவர் கவிதா முருகன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசி, உதவி திட்ட இயக்குனர் அபெல் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் கவிதா வரவேற்றார். மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, இயற்ைக சந்தை முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, வேலூர் மாவட்டத்தில் முதல் இயற்கை சந்தை தொடங்கப்படுகிறது. இதேபோல், மாவட்டம்தோறும் 8இயற்கை துவங்கப்பட உள்ளது. விவசாயிகள் இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துதல், அவற்றை மகளிர் குழுக்கள் மூலம் நேரடியாக சந்தைபடுத்துதல் இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் விவசாயிகள் நேரடி லாபம் பெறவும், பொதுமக்கள் இடைத்தரகர் இல்லாமல் குறைவான விலையில் காய்கறி மற்றும் உணவு பொருட்களை பெறவும் இந்த இயற்கை சந்தை வழி வகுக்கும் என தெரிவித்தார். விழாவில் துணைத்தலைவர் லோகலட்சுமி குமரன், வட்டார மேலாளர் இந்திரா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உஷா, கலைச்செல்வி, பாக்கியலட்சுமி, மகளிர் குழுவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். படச்செய்தி கம்மவான்பேட்டையில் மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், இயற்ைக சந்தை முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் ஊராட்சி தலைவர் கோவர்த்தனன்.
Next Story