ஸ்டாலின் ஆட்சியில் குடியிருப்பு பகுதிக்குள் புதியதாக வர இருக்கும் மீன் மார்க்கெட்டிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

ஸ்டாலின் ஆட்சியில் குடியிருப்பு பகுதிக்குள் புதியதாக வர இருக்கும் மீன் மார்க்கெட்டிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
X
ஸ்டாலின் ஆட்சியில் குடியிருப்பு பகுதிக்குள் புதியதாக வர இருக்கும் மீன் மார்க்கெட்டிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சைவ குடும்பத்தினர்கள் மற்றும் பொதுமக்களால் பரபரப்பு..*
ஸ்டாலின் ஆட்சியில் குடியிருப்பு பகுதிக்குள் புதியதாக வர இருக்கும் மீன் மார்க்கெட்டிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சைவ குடும்பத்தினர்கள் மற்றும் பொதுமக்களால் பரபரப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 26 வது வார்டில் சக்கரகுளம் இருக்கும் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சைவம் சாப்பிடும் குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெரு பகுதியின் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், முதல்வர் காலை உணவு திட்டம் சமைக்கும் இடம், ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான புண்ணிய குளங்களில் ஒன்றான சர்கரை குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் இதன் அருகில் காய்கறி சந்தைக்காக நகராட்சி நிர்வாகம் மூலம் புதியதாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது தற்போது இந்த கட்டிடத்தில் மீன் மார்க்கெட் இயங்குவதற்கு ஏலம் விடப்பட்டு கடைகள் மீன் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றி இருக்கும் பகுதிகளில் சைவம் சாப்பிடும் குடும்பத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலைக்கு ஸ்டாலின் ஆட்சியில் தள்ளப்பட்டுள்ளதாகவும். ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், முதல்வர் காலை உணவு திட்டம் சமைக்கும் இடம், சக்கரைக்குளம் அதன் அருகில் உள்ள கோவில்கள் அனைத்தும் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று தெரிவித்து மீன் மார்க்கெட் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் குடியிருப்பவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.முற்றுகையிட வந்தவர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மீன் சந்தை வராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்து சென்றுள்ளனர். நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் மீன் சந்தை வருவதற்கு உறுதுணையாக இருந்தால் இப்பகுதியில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என 26 ஆவது வார்டு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி:பாஸ்கரன் ( ஸ்ரீவில்லிபுத்தூர் )
Next Story