மொழியை அடிப்படையாக கொண்டு ஒரு கேவலமான அரசியலை திமுக செய்து வருகிறது மும்மொழிக் கொள்கைக்கு ஆதவார நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்

X
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மொழியை அடிப்படையாக கொண்டு ஒரு கேவலமான அரசியலை திமுக செய்து வருகிறது- விருதுநகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதவார நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்டி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழ்நாட்டில் சமகல்வி நிலவ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கையையும் அதில் உள்ளடக்கிய மும்மொழி கொள்கையையும் ஆதரித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை விருதுநகர் கிழக்கு மாவட்டத்தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மற்றும் மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் முன்னிலையில் தூத்துக்குடி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சசிகலா புஷ்பா தொடங்கி வைத்தார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மொழியை அடிப்படையாக கொண்டு ஒரு கேவலமான அரசியலை திமுக செய்து வருகிறது என்றும் மத்திய அரசு என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அது தமிழகத்திற்கு எதிரானது போல சித்தரிக்க திமுக முயல்கிறது என்றும் பிரதமர் எந்த வெளிநாடு சென்றாலும் உலகின் தொன்மையான தமிழ்மொழி தங்கள் நாட்டில்தான் உள்ளது என பெருமிதம் கொள்வதை சுட்டிக்காட்டிய அவர், மும்மொழிக் கொள்கையால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு கூடுதலாக ஒரு மொழியை மாணவர்கள் கற்கும் வாய்ப்பு ஏற்படும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். தமிழகத்தில் தமிழை திமுக வளர்க்கவில்லை. தமிழக மக்கள் மீது அக்கறை உள்ள கட்சி பாஜக தான். மும்மொழிக் கொள்கை தொடர்பாக பொய்யான தகவலை திமுக பரப்பி வருகிறது. மொழி வளம் என்பது பலம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்துக்களை பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளோம் என்று கூறினார்.
Next Story

